Saturday, 19 September 2009
கலைஞருக்கு அண்ணா விருது - ஏன்?
திமுக சார்பில் வழங்கப்படும் அண்ணா விருது முதல்வர் திரு கருணாநிதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் எதாவது ஆச்சரியப்படவோ, பெருமை பட்டுக்கொள்ளவோ ஏதும் உள்ளதா? திமுகவை பொறுத்தவரை திமுக வேறு கலைஞர் வேறு என்பதே இல்லை. தனக்கு தானே ஒரு விருதை கொடுத்துக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். திரு பேராசிரியர் அவர்கள் இதில் ஒரு மீடியம் மட்டுமே. கலைஞர் வேறு ஒருவரின் பெயரை (ஸ்டாலின், அழகிரி அல்லது கனிமொழி) பரிந்துரைத்தாலும் பேராசிரியர் மறுப்பேதும் சொல்லாமல் அதையும் அறிக்கையாக வெளியிடுவார். இந்த நிலையில் கலைஞருக்கு அண்ணா விருது ஏன் என்று தலைப்பிட்டு ஒரு கருத்தரங்கம் வேறு. ஏதோ ஐநா சபையில் இருந்து உயரிய விருது கொடுத்ததை போன்ற ஒரு effect டுடன். தலைப்பு பகுத்தறிவு கொள்கை (இந்து மத எதிர்ப்பு?), ஏழைகளுக்காக உழைப்பது (டிவி கொடுத்துள்ளாரே- கலைஞர் டிவி பார்க்க ), பேச்சாற்றல் (திருமதி ஜெயலலிதா என்று தான் அழைப்பேன் போன்ற பேச்சுகள்?), எழுத்தாற்றல் (உடன்பிறப்புக்கு கடிதம்?), கட்சியை கட்டுகோப்பாக வைத்திருத்தல் (குடும்பத்தில் எத்தனை பேரை அரியணையில் ஏற்றினாலும் கட்சியினர் யாரும் கேள்வி கேட்காதது?) மற்றும் அரசியல் நாகரிகம். (இதற்கு ஒரு example வேறு வேணுமா?) போன்றவை. இதற்கென்றே ஒரு நாலைந்து பேச்சாளர்கள் (ஜிங் ஜிங்) இருக்கிறார்களே. அவர்கள் தான் விருதுக்கான காரணத்தை அலசுகிறார்கள். ஒரு எளிய பாமரனுக்கு கூட புரியாதா இந்த விருதுக்கான காரணம்? திரு கலைஞர் அவர்களுக்கு இந்த ஜால்ராக்கள் எல்லாம் அலுக்கவே அலுக்காதா? எத்தனை வருஷமாக கேட்டுக்கொண்டு இருப்பார்?
Saturday, 5 September 2009
Heart Attack
Heart Attack ஏன்?
Heart Attach ஏன் வருகிறது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. இதயத்தில் உள்ள artery என்னும் (குருதி புனல்?) ரத்தக் குழாயில் அதிக கொலஸ்ட்ரால் சேருவதால் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் நிறுத்தப்படும்போது heart attack வருகிறது. Artery சுருங்கி narrow ஆக ஆகும்போதும் heart attack வருகிறது.
எப்படி காப்பாற்றலாம்?
ஒருவர் heart attack ல் பாதிக்க படும்போது, டாக்டர்கள் அவருக்கு clot busting drugs அல்லது angioplasty என்னும் கருவி மூலம் artery ல் ஏற்பட்டுள்ள அடைப்பை திறந்து காப்பாற்றலாம். அனால் இதில் காலம் (time) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிது தாமதம் ஆனாலும் patient இறக்க நேரிடும்.
காரணம் என்ன?
புகை பிடித்தல்
பரம்பரை
உயர் ரத்த அழுத்தம்
அதிக கொலஸ்ட்ரால்
உடற்பயிற்சி இல்லாமை
சர்க்கரை வியாதி
போன்றவை Heart attack ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Subscribe to:
Posts (Atom)