Saturday 20 June 2009

பிரபாகரன் மரணம் புலிகளால் ஒத்துக்கொள்ளப்பட்டது...

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவின் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும், பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள், வேறு துறைப் போராளிகள், மற்றும் சிறிலங்கா படைத்துறையின் உயர்பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் - 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி - முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன.

சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும், அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும், அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன.

அதனால் - அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் - எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.


இதேவேளை - தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக - இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே - எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத்துறையின் இயக்குநர் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களும் - ஆரம்பத்தில் - இருவேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதேவேளையில், அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும், சரண் அடைந்ததாகவும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் - எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் - தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும், அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் - எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி, வளர்த்தெடுத்து, நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை - அதே உறுதிப்பாட்டுடனும், அதே கட்டுக்கோப்புடனும், அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள 'நாடு கடந்த தமிழீழ அரசு' அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள், தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன், இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஆயிரம் மடங்கு நம்பகத் தகுந்த செய்தி வெளியிட்ட நக்கீரன் வார இதழ் என்ன பதில் சொல்ல போகிறது?

Tuesday 9 June 2009

தோல்வியிலும் அதிக வாக்குகள் பெற்று புதிய சாதனை


ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தமிழரான ஜனனி ஜனநாயகம் தோல்வி அடைந்தார். இந்திய அரசியல்வாதிகள் பாணியில் சொன்னால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாகப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

லண்டன் பகுதியிலிருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டிருந்தார் ஜனனி. அவருக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் பேராதரவு தெரிவித்திருந்தனர். ஜனனி வெற்றி பெற்றால் இலங்கைத் தமிழர்களின் அவலம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவர் மூலமாக ஒலிக்கும், விடிவு காலம் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நாங்கள் அனைவரும் அவர் வெற்றி பெறுவார் என்றே நம்பினோம்.


ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜனனி தோல்வியுற்றார். இருப்பினும் கூட, 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்து விட்டார் ஜனனி.

ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, எந்த ஒரு சுயேச்சை வேட்பாளரும் இவ்வளவு ஓட்டுக்கள் இதுவரை பெற்றதில்லை. அந்த வகையில் ஜனனி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சில கட்சிகளின் வேட்பாளர்களை விட ஜனனி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார். ஜனனி ஒரு லட்சம் வாக்குகளை பெற்றிருந்தால் MP ஆகி இருப்பார்.

லண்டன் பகுதியில் எட்டு எம்.பி இடங்கள் உள்ளன. இதில், 3 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சியும், ஆளும் தொழிலாளர் கட்சி 2 இடங்களையும் பெற்றன. லிபரல் டெமாக்ரட்ஸ், கிரீன் கட்சி, இங்கிலாந்து சுயேச்சைக் கட்சி ஆகியோருக்கு தலா ஒரு இடம் கிடைத்தது.

Jan பற்றிய சிறு தொகுப்பு கீழே உள்ளது....



Friday 5 June 2009

கப்பலேறி போயாச்சு...

Times of India நாளிதழ் நடத்திய sting ஆபரேஷன் மூலம் MBBS சீட்டுகளின் விற்பனை, மற்றும் சீட்டுகளின் விலை விபரம் தெரிய வந்துள்ளது. அதுவும் நம் தமிழ்நாட்டில் உள்ள கல்வி தந்தைகளின் கல்லூரிகளையே சாட்சியாக காட்டியுள்ளனர். மிக பெருமையாக இருக்கிறது. அதில் ஒரு கல்வி தந்தையான ஜெகத் ரட்சகன் சற்று நாட்களுக்கு முன்னர் தான் மத்திய அமைச்சராகி இருக்கிறார் தமிழ் இன தலைவர்? திரு கருணாநிதி அவர்களின் தயவில். ஒவ்வொரு தமிழனும் நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொள்ளலாம். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்ற கதையாக, தனக்கும் அந்த கல்லூரிக்கும் சம்பந்தம் இல்லை என்று மறுப்பு வேறு. அதற்கு ஆதாரமாக இருந்த கல்லூரியின் website டை நிறுத்தி விட்டார். பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைத்ததாம். Medical Council of India வின் website டில் இன்னும் அவர் பெயர் இருக்கிறதே? http://www.mciindia.org/apps/search/view_college.asp?ID=279. இதை கூட அவர் அமைச்சர் என்ற செல்வாக்கை பயன் படுத்தி எடுத்து விடலாம். இன்னும் ஏன் விட்டு வைத்துள்ளார் என்று தெரியவில்லை. . தென் கொரிய நாட்டில் முன்னால் அதிபர் தன் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிவிட்டார்கள் என்று தற்கொலை செய்து கொண்டார். அதை மறுக்க கூட முடியாத கோழை போல அந்த தலைவர். ஒரே ஒரு முறை இந்திய அரசியல் வாதிகளிடம் ஒருநாள் workshop அட்டென்ட் பண்ணி அரசியல் கற்றிருக்கலாம். Google image search இல் 'Jegath Ratchagan' என்று டைப் செய்து தேடி பாருங்கள். பக்கத்தில் உள்ள ரஜினியின் இமேஜ் display ஆகிறது.

Tuesday 2 June 2009

Rare Photos of Shah Rukh and His Family




சர்க்கரை வியாதி ( Diabetes)



அவ்வப்போது medical article எழுதலாம் என்றிருக்கிறேன். எளிய தமிழில் எழுதினால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதனால் இன்று சர்க்கரை வியாதியை (diabetes) பற்றி பார்ப்போம்.

சர்க்கரை வியாதி என்றால் என்ன?
நாம் உண்ணும் உணவில் உள்ள sugar ஆனது செரிமானம் ஆகி சிறு சிறு பகுதியாக பிரிக்கபடுகிறது. இவை glucose எனப்படும். glucose, நமது ரத்தத்தின் செல்களில் புகுந்து நமது உடலுக்குத் தேவையான எரிசக்தியாக பயன்படுகிறது. உடலில் pancreas என்று ஒரு gland உள்ளது. இது insulin என்னும் ஹார்மோனை சுரக்கிறது. இந்த இன்சுலின் ஹார்மோன், glucose நமது ரத்தத்தின் செல்களில் புகுவதற்கு உதவுகிறது. Pancreas நமது ரத்தத்தில் எவ்வளவு க்ளுகோஸ் உள்ளதோ அதற்கேற்றவாறு insulinனை சுரக்கிறது. இன்சுலின் போதிய அளவு சுரக்காத போது, glucose நமது ரத்தத்திலேயே சேர்ந்து விடுகிறது. இதுவே நமது ரத்தத்தில் sugar (glucose) அளவை உயர்த்தி diabetes வர காரணமாகும். இதன் காரணமாகவே நாம் செயற்கையாக இன்சுலினை injection வடிவில் உடலில் ஏற்றிக் கொள்கிறோம்.






சர்க்கரை வியாதிக்கு தீர்வு?

இந்த நிமிடம் வரை சர்க்கரை வியாதியை குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. யாராவது மருந்து என்னிடம் இருக்கிறது வாருங்கள் என்று விளம்பர படுத்தினால் டுபாக்கூர் தான். இந்நேரம் அவருக்கு nobel பரிசு கொடுத்து இந்த உலகம் அவரை கவுரவ படுத்தி இருக்கும். நம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதன் மூலம் வியாதியை கட்டுபடுத்தலாம் அவ்வளவுதான்.



diabetes வராமல் எவ்வாறு தடுக்கலாம்?

1) இது பரம்பரையாகவும் வரலாம். நம் உணவு பழக்கத்தை கட்டுபடுத்துவதன் மூலமாகவும் diabetesசை தவிர்க்கலாம்.

2) regular ஆக excercise செய்ய வேண்டும்.

3) excercise செய்ய முடியாதவர்கள் daily atleast 30 நிமிடம் walking ஆவது செல்லவேண்டும்.

4) அடிக்கடி blood test செய்து sugar அளவை check செய்ய வேண்டும்.

Graphic Talents...

நெனச்சது ஒன்னு... நடந்தது ஒன்னு...