Sunday 31 May 2009

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் 'நாடக நடுநிலைமை': 'குமுதம்' சாடல்

'குமுதம்' இதழில் வெளிவந்த அரசு கேள்வி - பதில் வருமாறு:

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?

ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.

சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.

இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது. அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்... இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.

Thursday 28 May 2009

கோவையில் பைக் ஆம்புலன்ஸ்

போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி விபத்தில் சிக்கியவர்களுக்கு விரைவாக முதலுதவி வழங்கும் வகையில் அவசர பைக் ஆம்புலன்ஸ் சேவை முதன் முறையாக கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கே.ஜி. மருத்துவமனை சார்பில் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நடந்த துவக்க விழாவில் அதன் தலைவர் ஜி.பக்தவத்சலம் தலைமையில் கோவை மாநகரக் காவல்துறை ஆணையர் கே.சி.மஹாலி சேவையை துவக்கி வைத்தார்.

பக்தவத்சலம் கூறுகையில்,

சைரன் விளக்குடன்கூடிய இந்த பைக் ஆம்புலன்ஸ் நான்கு சக்கர வாகனங்களைப் போல் போக்குவரத்தில் சிக்காமல் விரைவாக செல்ல முடியும்.

மருத்துவப் பயிற்சி பெற்ற ஒருவர் இந்த பைக் ஆம்புலன்சில் சென்று முதலுதவி செய்வார். விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்த இழப்பை நிறுத்தி, செயற்கை பிராண வாயு செலுத்தும் வசதி இந்த பைக்கில் உள்ளது.

இந்த சேவை தேவைப்படுவோர் 155 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்

இலங்கைக்கு ஆதரவாக ஐநா சபையில் இந்தியா

இலங்கை படையினர் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தியுள்ளன.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் இலங்கை அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறுல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது.

தொடக்கம் முதலே இந்த கோரிக்கைக்கு எதிராக இந்தியா தலைமையிலான ஆசிய நாடுகள் செயற்பட்டு வந்தன.

இதனால், இந்த கோரிக்கை குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்ததால் கோரிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் அது நேற்று புதன்கிழமை மாலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு ஆதரவாக இரோப்பிய நாடுகள் வாக்களித்தன. குறிப்பாக சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, கியூபா, ரஸ்யா மற்றும் ஆபிரிக்க நாடுகளும் இந்த கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தன.

எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்த்தன.

வாக்கெடுப்பின் முடிவில் கோரிக்கைக்கு ஆதரவாக 17 நாடுகளும் எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் அது தோல்வியடைந்துள்ளது.

இதேவேளையில் இதே கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கமும் தனது ஆதரவு நாடுகளின் ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தது.

இந்த கோரிக்கை மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த கோரிக்கைக்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.

எனினும் வாக்கெடுப்பின் நிறைவில் இலங்கையின் நிதியுதவி கோரும் கோரிக்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் இலங்கை முன்வைத்த கோரிக்கை தீர்மானம் ஆக்கப்பட்டு நிதியுதவி வழங்குவது என முடிவாகியுள்ளது.

இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் வசிப்பதால் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார்.

மக்களின் தரத்தை அரசு பேண வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் எனவும் நாம் இலங்கை அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

9 கலெக்டர்கள்-ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 9 கலெக்டர்கள் உள்பட பல பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக்கழக நிர்வாக இயக்குநராக உள்ள தாயனந்த் கட்டாரியா இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

இதுவரை தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த அதுல்ய மிஸ்ரா, போக்குவரத்து கழகச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து செயலாளராக உள்ள தேவேந்திரநாத் சாரங்கி வனத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சத்யபிரத சாஹூ விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் செயலாளராகவும், அந்தப் பொறுப்பில் இருந்து வந்த சுதீப் ஜெயின் ஊரக வளர்ச்சித்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை சிறப்பு செயலாளராக தமிழ்நாடு சாலை திட்ட இயக்குநர் தியாகராஜன் மாற்றப்படுகிறார்.

பொதுத்துறை இணைச் செயலாளர் எம்.சந்திரசேகரன், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார்.

அங்கு ஆட்சியராக இருந்த உதயசந்திரன் மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கஜ் குமார் பன்சல் மாற்றப்பட்டு வேளாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக உமாநாத்தும், இதுவரை அந்த பொறுப்பில் இருந்து வந்த பழனிகுமார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த.ஜெயராமன் திருநெல்வேலி ஆட்சியராகவும், சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த மைதிலி ராஜேந்திரன் தொழில்துறை துணைச் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை துணைச் செயலாளராக இருந்து வந்த ஷோபனா சென்னை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் கடலூர் ஆட்சியராகவும் மதுரை ஆட்சியராக மதிவாணனும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

Wednesday 27 May 2009

இலங்கை இராணுவத்திடம் விடுதலைப்புலிகள் சரண் அடைய முடிவு: கருணா புதிய தகவல்


விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் கடந்த 18-ந்தேதி அறிவித்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக 7,200 விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர்.
இவர்களில் 1,600 பேர் பெண் விடுதலைப்புலிகள். இவர்கள் அனைவரும் அரசின் பாதுகாப்பில் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய முடிவு செய்துள்ளனர்.

2 பேட்ஜ் விடுதலைப்புலிகள் சரண் அடைய உள்ளனர். இந்த தகவலை இலங்கை அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த பலர் என்னை தொடர்பு கொண்டனர். இலங்கை இராணுவத்திடம் சரண் அடைய ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளனர்.

எனவே, இதுபற்றி இலங்கை அரசுடன் பேசி வருகிறேன். அவர்களை சமுதாயத்தில் ஒரு அங்கமாக சேர்க்க விரும்புகிறேன். அவர்கள் என்னை நம்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

வென்றார்கள்... வாங்கினார்கள்...

அனைவரையும் சமாதான படுத்தியும் திருப்தி படுத்தியும் ஒரு வழியாக மத்திய அமைச்சர்களின் list தயாராகி விட்டது. திரு மன்மோகன் சிங்கும், திருமதி. சோனியா காந்தியும் நீண்ட விவாதத்திற்கு பின் இந்த நீண்ட listடை வெளியிட்டுள்ளார்கள். இடையே இடையே rest எடுத்துவிட்டு படிக்கவும்.

Cabinet அமைச்சர்கள்
1)பிரணாப் முகர்ஜி
2)சிதம்பரம்
3)A.K. ஆண்டனி
4)S.M. கிருஷ்ணா
5)சரத் பவார்
6)மம்தா பானர்ஜி
7)கமல் நாத்
8)குலாம் நபி ஆசாத்
9)கபில் சிபல்
10)சுஷில் குமார் ஷிண்டே
11)முரளி தியோரா
12)ஜெயபால் ரெட்டி
13)ஆனந்த் ஷர்மா
14)ஹண்டிக்
15)அம்பிகா சோனி
16)மெய்ரா குமார்
17)வயலார் ரவி
18)வீரப்ப மொய்லி
19)C.P ஜோஷி
20)வீரபத்திர சிங்
21)விலாஸ்ராவ் தேஷ்முக்
22)பாரூக் அப்துல்லா
23)தயாநிதி மாறன்
24)ராஜா
25)மல்லிகார்ஜுன் கார்கே
26)குமாரி செல்ஜா
27)சுபோத் கான்ட் சகாய்
28)M.S கில்
29)G.K வாசன்
30)பவன் குமார் பன்சால்
31)முகுல் வாஸ்னிக்
32)கண்டிலால் புரியா
33)M.K. அழகிரி

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
34)பிரபுல் படேல்
35)ப்ரித்விராஜ் சவான்
36)ஸ்ரீ பிரகாஷ் ஜைஸ்வல்
37)சல்மான் குர்ஷீட்
38)தின்ஷா படேல்
39)ஜெய்ராம் ரமேஷ்
40)கிருஷ்ணா திரத்

இணை அமைச்சர்கள்


41)E. அஹமத்
42)V. நாராயணசாமி
43)ஸ்ரீகாந்த் ஜென
44)முள்ளப்பல்லி ராமசந்திரன்
45)D. புரந்தேஸ்வரி
46)பனபகா லக்ஷ்மி
47)அஜய் மகேன்
48)K.H. முனியப்பா
49)நமோ நரைன் மீனா
50)ஜ்யோதி ரதித்ய சிந்தியா
51)ஜிதின் பிரசாத்
52)A. சாய் பிரதாப்
53)குருதாஸ் காமத்
54)M.M. பள்ளம் ராஜு
55)மகாதேவ் கண்டேலா
56)ஹரிஷ் ராவத்
57)K.V. தாமஸ்
58)ஸொவ்கத ரே
59)தினேஷ் திரிவேதி
60)சிசிர் அதிகரி
61)சுல்தான் அஹ்மத்
62)முகுல் ராய்
63)மோகன் ஜட்டுவ
64)S.S. பழனி மாணிக்கம்
65)D. நெபோலியன்
66)S. ஜகத்ரக்ஷகன்
67)S. காந்திசெல்வன்
68)ப்ரநீத் கூர்
69)சச்சின் பைலட்
70)ஷஷி தரூர்
71)பரத்சின் சோலங்கி
72)துஷார்பி சவதரி
75)அருண் யாதவ்
76)பிரதீக் பிரகாஷ்பாபு பட்டில்
77)R.P.N. சிங்
78)வின்சென்ட் பாலா
79)பிரதீப் ஜெயின்
80)அகதா சங்கமா

Monday 25 May 2009

வீரவணக்கங்கள்...

Email லில் ஒரு நண்பர் அனுப்பியது.

வேலுப்பிள்ளை
அவர்களின்
விடிவெள்ளி...
எங்கள்
அண்ணன்
பிரபாகரனே...

உன்னொருவனின்
வீர மரணத்துக்கும்...
உன்னோடு
சகலங்களிலும்
உடனிருந்து
உயிர்
துறந்த...
என்னுடைய
பச்சை
தமிழ்
ரத்தங்களே...


உங்களுக்கு
இந்த கையாலகாத
கடன்கார தமிழனின்
கடைசி வணக்கங்கள்...

எனக்கு தெரியும்...
கண்டிப்பாக
இதை நீ ஏற்றுக்கொள்ள
மாட்டாய் என்று...

ஏனெனில்...
இலவசங்களுக்கு
விலை போன நான்...
எவ்வாறு
உங்கள் வீரமரணத்துக்கு
கண்ணீர் அஞ்சலி
செலுத்த முடியும்...

அளிக்கும் வாக்குக்கு
கூட லஞ்சம்
வாங்கும் நான்....
எவ்வாறு வாய் விட்டு
அழ முடியும்...

அந்நிய தேசத்தாளை
"அன்னை" என்று
அழைக்கும் நான்...
உன்னை என்
அண்ணனாக
நினைக்க மறந்து விட்டேனே...

என் "அன்னை"-இன்
ஒரு தாலிக்காக...
ஓராயிரம் லட்சம்
தாலிகளை அறுத்துவிட்ட
சிங்களத்தானை
சிரம் இறக்க
மறந்துவிட்டேனே...

தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்
என்பார்கள்...
ஆனால்...
அண்ணா
நீ போர்க்களத்தில்
லட்சிய போர் செய்யும்
போது...
நான் இங்கு
IPL20 மட்டை
பந்து பார்த்து
கொண்டு அல்லவா
இருந்து விட்டேன்...
மட்டை பந்தில்
இந்தியா தோற்றால்
மானம் போய்விட்டதாக
சொல்லும் நான்...
உன்னொருவனின்
தலைமையில் நடத்தும்
உரிமை போராட்டம்...
சிங்கள ஓநாய்களால்
சிதிலம் செய்தப்போது
சீற மறந்து விட்டேனே...

இனிமேல்....
நான் பதங்கமாகும்
கற்பூரத்தில் மட்டும்....
பக்தியை
தேடி என்ன பயன்....

இரவின் பாலங்களில்
மட்டும்....
உறவினை
தேடி என்ன பயன்....
நான் இனி தமிழனும்
இல்லை...

உன் தம்பியாகும்
தகுதியும் இல்லை....
மெல்ல தமிழ்
இனி சாகும்....
தமிழனும் மெல்ல
இனி சாவான்....

பாறைகளைச்
சந்திக்காவிடில்
ஓடைகளுக்குச்
சங்கீதம் இல்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டதை விடுதலைப் புலிகள் சார்பாகப் பத்மநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்புடைய சர்வதேச உறவுகள் பிரிவின் தலைவராக அறியப்படும் செல்வராசா பத்மநாதன் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

பிபிசி தமிழோசைக்கு இவர் வழங்கிய ஓர் பேட்டியில், மே பதினேழாம் தேதி பிரபாகரன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார் என்றாலும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது பற்றிய விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக வன்முறையற்ற வழிகளில் இனி விடுதலைப் புலிகள் போராடுவார்கள் என்றும் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

Sunday 24 May 2009

அப்பாடா...


அப்பாடா... ஒரு வழியா தமிழ்நாட்டில் நிலவி வந்த மிகப்பெரிய பிரச்சனை தீர்ந்தது. மகன், மகள், பேரன் எல்லோருக்கும் பதவி கிடைச்சாச்சு. இந்த காங்கிரஸ்காரங்களுக்கு நம்ம பெருந்தன்மை தெரியமாட்டேங்குதே. நான் என்ன மகனுக்கு பிரதமர் பதவியா கேட்டேன்?

"தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேரம் பேசுகிறார் ஒரு தமிழினத் தலைவர்": 'தினமணி' சாடல்


தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேரம் பேசுகிறார் ஒரு தமிழினத் தலைவர்" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான 'தினமணி' சாடியுள்ளது.
இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளிவந்த 'தினமணி' ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"மத்தியில் புதிய அமைச்சரவை அமையும்போதெல்லாம் இந்தியா முழுவதும் தமிழகத்தைக் கூர்ந்து பார்க்க நேர்வது வழக்கமாகிவிட்டது.

2004 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக கேட்ட அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முன்னதாகவே காங்கிரஸ் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தைக் காட்டி எல்லோரையும் பிரமிக்க வைத்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி.

இப்போதும் அதேபோன்று அமைச்சர் பதவி கேட்பதில் கருத்து வேறுபாடு கொண்டு, அதை ஒருநாள் முழுவதும் ஊடகங்கள் பெரிதாகப் பேசிமுடித்த பிறகு, டில்லியை விட்டுப் புறப்பட்டு வந்துவிட்டார் தமிழக முதல்வர்.



பல்வேறு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை தாமாகவே அளித்துள்ள நிலையில், ஆட்சி நடத்தத் தேவையான எண்ணிக்கை பலம் காங்கிரசிடம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொடுப்பதை ஏற்றுக்கொள்வது அல்லது வெளியிலிருந்து ஆதரிப்பது என்பதைத் தவிர திமுகவுக்கு வேறு வழி கிடையாது. காங்கிரசுடன் உறவை முறித்துக்கொண்டால் மத்திய அரசுக்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக, தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத திமுக அரசுக்குத்தான் இழப்பு.

எண்ணிக்கை பலத்தால் மட்டுமே தற்போது திமுகவின் கோரிக்கையை காங்கிரஸ் மறுக்கிறது எனச் சொல்வதற்கில்லை. சென்ற ஆட்சிக் காலத்தில் கூட்டணிக் கட்சிகளால் காங்கிரஸ் கட்சி சந்திக்க நேர்ந்த தர்மசங்கடங்கள் ஏராளம். அதில் முக்கியமான இரண்டு நிகழ்வுகள் திமுக அமைச்சர்களால் நேர்ந்தவை.



முதலாவதாக, சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான டி.ஆர். பாலு காட்டிய அவசரம். இதனால் தமிழக அரசே ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்து, அதை அடையாள உண்ணாவிரதமாக மாற்றியது. சேது சமுத்திரத் திட்டச் செலவும், அதன்பிறகு கிடைக்கும் குறைந்த வருவாயும், கால்வாயைத் தொடர்ந்து தூர்வாரும் பணிக்கான தொடர் செலவினமும், பவளப்பாறை அழிவு மற்றும் ராமர் பாலம் சிதைவு என எல்லா பிரச்னைகளும் சேர்ந்து கொண்டதால்தான் இத்திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கொஞ்சம் தாமதப்படுத்த நேர்ந்தது.

ஆனால், மத்திய அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது திமுக. அடுத்தது ரூ. 60,000 கோடி 'ஸ்பெக்ட்ரம்' முறைகேட்டில் அமைச்சர் ராசா மீதான புகார். ஆகவே, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தகைய அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் அதிக கறாராக இருப்பதைக் குறையாகச் சொல்லமுடியாது.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, திமுக கேட்பதைக் கொடுத்து சமாதானம் செய்துகொள்ளும் முடிவைத்தான் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் மேற்கொண்டுள்ளனர். ஆட்சியை அமைக்கும்போது நிலையற்ற தன்மையை விரும்பமாட்டார்கள். உத்தரப் பிரதேசம் போல தமிழ்நாட்டிலும் காங்கிரசும் சுய பலத்துடன் வளர்க்கத் தமிழக காங்கிரசார் விரும்பினாலும் அவர்கள் தன்மானத்துடன் செயல்படுவதைக் காங்கிரஸ் தலைமை விரும்பாது.

தற்போது திமுக எத்தனை அமைச்சர் பதவிகளைக் கேட்டது, எத்தனை பெற்றது, அல்லது பெற்றுக்கொள்ள மறுத்தது என்பது முக்கியமே அல்ல. அதற்கான நேரம் இதுவா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 'மறைவு'க்குப் பின், ஈழத் தமிழர்கள் 2.8 லட்சம் பேர் கதியற்று, காப்பான் இன்றி, கவலையிலும் பீதியிலும் பட்டினியாலும் நொந்து கிடக்கும்போது, அவர்களது வாழ்வு மற்றும் பாதுகாப்புக்குத் தமிழர் குழுக்களை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்கும்போது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை அனுப்பி தமிழர்கள் கெளரவமாக நடத்தப்படுகிறார்களா; நிவாரணம் முழுவதுமாக கிடைக்கிறதா என்று கண்காணிப்புக் குழுக்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய தமிழக முதல்வர், டில்லியில் அமைச்சர் பதவிக்காக பேரம் பேசிக் கொண்டிருந்தால்.... இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ!

உலக நாடுகளும், ஐ.நா. சபையும் தமிழருக்கு உதவிட இராணுவத்தின் கட்டுப்பாடு பெரும் தடையாக இருக்கிறது என்றும், கட்டுப்பாடுகளை நீக்கினால்தான் மறுவாழ்வுப் பணிகளைத் தொடங்க முடியும், உதவிகள் வழங்க முடியும் என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்கையில், தமிழக அரசின் செயல்பாடு என்ன?

ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று ஒரு சொல்லடை உண்டு. தென்னிலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்க, தில்லியில் பதவி பேரம் பேசினார் ஒரு தமிழினத் தலைவர் என்ற பேச்சு வரலாற்றில் இடம்பெறுவது சரியா?

இன்னின்ன அமைச்சர் பதவி வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்கும் திமுக தலைவர் கருணாநிதி, சூழ்நிலை அவசியம் கருதி, ஈழத் தமிழர் நலன் மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் அங்கே அரசியல் தீர்வும் அதிகாரப் பகிர்வும் நியாயமாகவும் முறையாகவும் நடைபெறவும் ஒரு அமைச்சர் பதவியை திமுகவுக்கு ஒதுக்கக் கோரியிருந்தாலும்கூட, அதற்காக அவரைப் பாராட்டலாம். ஆனால் நிலைமை அதுவாக இல்லை.



திமுக தலைவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், இப்பிரச்னைக்குத் தீர்வு காண அவர் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்ச முன்பு சொன்னதனால், இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி பயணப்பட்டிருக்க வேண்டிய இடம் கொழும்புதானே தவிர, டில்லி அல்ல.

திசை மாறிப் பறக்கிறது திமுகவின் தமிழ் இன உணர்வு!" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.