Saturday, 21 November 2009

பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் கருணாநிதி: ஜெயலலிதா

தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது மௌன வலியாகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது புதுடெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய அலறல் வலியாக இருக்கும் என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியை ஜெயலலிதா கடுமையாக தா‌க்‌கியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுத் தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

தன்னுடைய அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக என்று கூறி தான் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

இதிலிருந்தே தேர்தல் தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் கருணாநிதியால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அது என்பது தெளிவாகிறது.1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் எனது தலைமையில் அ.இ.அ.தி.மு.க 164 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி அடைந்த நேரத்தில், ஒற்றை எண்ணில் ஒரே இடத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு படுதோல்வியை தழுவிய கருணாநிதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போதும் அவமானம் தாங்காமல் தனி நபராக ஆளும் கட்சியை எதிர்கொள்ள துணிவில்லாமல் கருணாநிதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரே தவிர எந்த லட்சியத்திற்காகவோ கொள்கைக்காகவோ தியாகம் செய்யவில்லை. அடுத்ததாக இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்ததாக கூறியிருக்கிறார் கருணாநிதி.

உண்மை நிலை என்னவென்றால் 1976ஆம் ஆண்டு ஊழல் புரிந்ததற்காகவும், 1991ஆம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் தான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. இவ்வளவு வாய்கிழிய பேசும் கருணாநிதி, 2008ஆம் ஆண்டு தான் தாங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் உதவியோடு இலங்கை இராணுவம் அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றி ஒரு வரிக் கூட தெரிவிக்கவில்லையே.

ஒரு வேளை அவர் நடத்திய கபட நாடகங்களான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், மனிதச் சங்கிலி போராட்டம் என்று அறிவித்து அனைவரையும் கொட்டும் மழையில் நனையவிட்டுத் தான் மட்டும் தன் மகனுடன் சீருந்தில் பவனி வந்தது, பிரதமருக்கு தந்தி கொடுங்கள் என்று அறிவித்தது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என அறிவித்தது, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது, உலகத்தில் இதுவரை யாருமே நடத்தியிராத 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை மனதில் வைத்துத்தான் அறப் போராட்டங்கள் நடத்தியதாக தனது அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார் போலும்.

கருணாநிதிக்கு உண்மையான தமிழர் பற்று இருந்திருக்குமானால், 2008ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இதை கருணாநிதி செய்திருப்பாரேயானால் அப்பொழுதே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினம் அழிவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். இதைச் செய்யாததன் மூலம் தமிழினத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி இழைத்து விட்டார்.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட கருணாநிதி முக்கிய காரணமாகி விட்டார். தன்னலம் காரணமாகத் தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் வகையில் பிரபாகரன் தீவிரவாதி அல்ல, என் நண்பன் என்று தான் கூறியதையும், நாங்களே அடிமைகளாக இருக்கிறோம் என்று கூறி இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் தன்னுடைய இயலாமையை தெரிவித்ததையும் மறந்துவிட்டு, தற்போது பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி. வீரம் என்கிற போராடும் மன வலிமை தன்னிடம் இல்லை என்பதையும், தன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயல்படும் விவேகம் தன்னிடத்தில் மேலோங்கி நிற்பதையும் தனது அறிக்கையின் மூலம் கருணாநிதி தெளிவுபட கூறியிருக்கிறார்.

தமிழர்களுக்கு தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது மௌன வலியாகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது புதுடெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய அலறல் வலியாக இருக்கும். இதுதான் கருணாநிதியின் தத்துவம்.

இந்த மௌன வலியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தமி‌ழினத்திற்குக் கருணாநிதி இழைத்த துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தனது அ‌றி‌க்கை‌யி‌ல் ஜெயல‌லிதா கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் அவரச முடிவால் ஏற்பட்ட விளைவுகள்: கருணாநிதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் அவரச முடிவால் ஏற்பட்ட விளைவுகளை எண்ணி அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்து அறிக்கை வருமாறு:

''ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல் ‌‌தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சனைக்காக எழுப்பிய குரலும், இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும், நடத்திய அறப்போராட்டங்களும், சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்த நிலைகளும், ஏன், இருமுறை ஆட்சியையே இழந்த சரித்திரச் சம்பவங்களும்,

தி.மு.கழகத்தின் சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள்; செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும், "டெசோ'' இயக்கத்தின் சார்பில் நானும், தமிழர் தலைவர் வீரமணியும், பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் முன்னின்று மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகளைத் தொடர்ந்து; 4.5.1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப்பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும், அந்த மாநாட்டில் அகில இந்திய ரீதியில் என்.டி.ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பதும்,

அந்த மாநாட்டிற்கு பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு போராளிகளிடையே அடிக்கடி எழும் புயல் குறித்து விவாதித்து; அதனை நிறுத்த சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள் என்பதும், ஆனால் அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் தான் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை என்பதும்; அரசு பொறுப்பில் முதலமைச்சராக இருந்து கொண்டே, அமைதிப்படை இந்தியாவிற்கு திரும்பி வந்ததை வரவேற்க செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வும், இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால் விடுதலைப்படை முகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு; இதுபோன்ற போர்முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்.

எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ; என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்தபோது கூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றதையும், நடைபெற்றதற்கான காரணத்தையும், நான் அல்ல; என்னைப் போன்றவர்கள் அல்ல; இதோ மவுன வலி உணர்ந்து, அதனை நமக்கு உரைக்கும் அருமை நண்பர்களாம்,

தமிழ் எழுத்தாளர்களில் தலைநிமிர்ந்து நிற்கும் தன்மானத் தோழர், கோபாலுக்கு; அண்மையில் சென்னைக்கு வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், இன்றைய இலங்கை எதிர்க்கட்சி தலைவரும், இலங்கையின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே 18.11.2009 தேதியிட்ட நக்கீரன் வார இதழுக்காக அளித்த பேட்டியில், "இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்தபோதெல்லாம் அதனை தவிர்த்தார் பிரபாகரன்.

2003இல் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து தானாகவே வெளியேறினார். 2005இல் டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார். மேலும் 2005இல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்; பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார்.

அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறிவிட்டார். ''என்று ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

விளைந்த நிலைமையை எண்ணிப்பார்ப்பதற்கு இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப் புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்; டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும்; பத்மநாபாவையும், அவரோடு இணைந்து பத்து போராளிகளையும் கொன்று குவித்த்தனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Tamilnadu Politics and TV Channels...


ஒரு காலத்தில் கட்சி ஆரம்பித்தால் அதற்கென்று சில கொள்கைகள் இருக்கும். சில இலட்சியங்கள் இருக்கும். அந்த காலம் எல்லாம் தமிழ் நாட்டில் மலையேறிவிட்டது. இன்று ஒரு கட்சி ஆரம்பித்து நடத்துவதற்கு கொள்கை, இலட்சியங்கள் போன்றவைகள் எதுவும் தேவை இல்லை. ஏன் தொண்டர்கள் கூட இரண்டாம் பட்சம் தான். கட்சி நடத்துவதற்கு இன்று TV Channelகள் ஒரு அத்த்யவசியத் தேவையாகி விட்டது. தன் கட்சிக்கான ஒரு TV Channel இல்லாவிட்டால் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்ற ஒரு போக்கும், மனோபாவமும் ஏற்பட்டு விட்டது. Sun TV திமுகவின் தேர்தல் பிரசார media வாக சென்ற சட்ட மன்ற தேர்தலில் செயல்பட்டது. தேர்தல் முடிவிற்கு ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது Sun TV யின் தேர்தல் பிரச்சாரம். இலவச TV, கேஸ் ஸ்டவ் மற்றும் திமுகவின் உடனடி தேர்தல் அறிக்கையையும் கிராமத்தின் நுனி வரை கொண்டு சென்றது. Sun TV க்கும் திமுக தலைமைக்கும் தகராறு வந்த போது பல்லாண்டுகள் பாரம்பரியமிக்க திமுக விற்கு TV Channel இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி கலைஞர் TV தொடங்க வேண்டியதாகி விட்டது. Jaya TV பற்றி கேட்கவே வேண்டாம். பெயர் ஒன்றே போதும். செல்வி ஜெயலலிதாவின் தினசரி அறிக்கை தான் என்றுமே உலகின் தலைப்பு செய்தி அவர்களுக்கு. தேர்தல் முடிவுகளின் போது கூட அதிமுக வென்றால் மட்டுமே Jaya TV இல் முடிவுகளை அறிவிப்பார்கள். இல்லையென்றால் தேர்தல் நடந்த சுவடு கூட இல்லாது போல் ஒரு திரை படத்தை ஒளிபரப்பிகொண்டு வேறு வேலை பார்க்க கிளம்பி விடுவார்கள்.

தேசிய கட்சியான காங்கிரஸ் பிரமுகர்கள் (இதற்கு ஏது தமிழகத்தில் தலைமை) கூட TV Channel கள் ஆரம்பித்துள்ளார்கள். Mega TV, Vasanth TV நல்லவேளை கை TV, சோனியா டிவி எல்லாம் இல்லை. பாமக, மக்கள் TV என்று Channel ஆரம்பித்து பாமக செய்திகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.

உலக அளவில் பொதுவாக TV Channels என்பது Entertainment, News, Lifestyle என்று பலவகை ஆக பிரிவு படுத்தி வைப்பார்கள். தமிழ் TV Channel எந்த விதத்தில் சேர்ப்பது? TV Channel லுக்கு என்று ஒரு புது குறிக்கோளை தமிழ்நாட்டில் மட்டுமே பார்க்கலாம். இந்த லட்சணத்தில் Captain TV என்று விஜயகாந்த் ஒரு Channel லை பொங்கல் அன்று ஆரம்பிக்க இருக்கிறார்.

Saturday, 14 November 2009

China mobile வாங்க போறிங்களா?




உலகில் எந்த புதிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டாலும், சீனாவில் அதே மாதிரி குறைந்த விலையில் china product செய்து விற்க ஆரம்பித்து விடுவார்கள். mobile phone களும் அதற்கு விதி விலக்கல்ல. Apple Iphone கூட china phone versionல் கிடைக்கிறது. அதுவும் மிக மிக குறைந்த விலைகளில். இதுபோன்ற mobileகள் வாங்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில். ஏனென்றால் வரும் December முதல் முறையான IMEI இல்லாத mobile phoneகளை தடை செய்ய போகிறார்கள் ( இந்த தடை தற்போது ஏற்கனவே UKவில் இருக்கிறது) . சரியான IMEI இல்லாத mobile phone களை உபயோகிக்க முடியாது. IMEI என்றால் என்ன? International Mobile Equipment Identity என்பதன் சுருக்கமே IMEI. இது ஒவ்வொரு mobile phone க்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் தனி எண் ஆகும். ஒரு மொபைல் போனில் இருக்கும் IMEI வேறு மொபைல் போனில் இருக்காது. இருக்கவும் கூடாது. அப்படி இருந்தால் அது duplicated போன் ஆகும். சட்டப்படி தவறு. பொதுவாக china mobile களில் சரியான IMEI இருக்காது.


IMEI எப்படி கண்டு பிடிப்பது?
இது ரொம்ப easy. உங்க போனில் battery யை கழற்றி விட்டு பார்த்தால், மொபைல் போனில் பிரிண்ட் செய்ய பட்டிருக்கும். அல்லது உங்கள் மொபைல் போனில் *#06# என்று டைப் செய்தால் உங்கள் போனின் IMEI தெரியவரும்.

என் IMEI சரியானதா என்று எப்படி கண்டு பிடிப்பது?
ரொம்ப simple. www.numberingplans.com என்ற web site க்கு போகவும். அங்கே உங்கள் IMEI கொடுத்து check பண்ணினால் உங்கள் IMEI நம்பர் valid ஆனதா என்று தெரிந்து விடும்.

மொபைல் போன் வாங்கும் போது கவனமாக இருங்கள்.