Saturday 21 November 2009

Tamilnadu Politics and TV Channels...


ஒரு காலத்தில் கட்சி ஆரம்பித்தால் அதற்கென்று சில கொள்கைகள் இருக்கும். சில இலட்சியங்கள் இருக்கும். அந்த காலம் எல்லாம் தமிழ் நாட்டில் மலையேறிவிட்டது. இன்று ஒரு கட்சி ஆரம்பித்து நடத்துவதற்கு கொள்கை, இலட்சியங்கள் போன்றவைகள் எதுவும் தேவை இல்லை. ஏன் தொண்டர்கள் கூட இரண்டாம் பட்சம் தான். கட்சி நடத்துவதற்கு இன்று TV Channelகள் ஒரு அத்த்யவசியத் தேவையாகி விட்டது. தன் கட்சிக்கான ஒரு TV Channel இல்லாவிட்டால் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்ற ஒரு போக்கும், மனோபாவமும் ஏற்பட்டு விட்டது. Sun TV திமுகவின் தேர்தல் பிரசார media வாக சென்ற சட்ட மன்ற தேர்தலில் செயல்பட்டது. தேர்தல் முடிவிற்கு ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது Sun TV யின் தேர்தல் பிரச்சாரம். இலவச TV, கேஸ் ஸ்டவ் மற்றும் திமுகவின் உடனடி தேர்தல் அறிக்கையையும் கிராமத்தின் நுனி வரை கொண்டு சென்றது. Sun TV க்கும் திமுக தலைமைக்கும் தகராறு வந்த போது பல்லாண்டுகள் பாரம்பரியமிக்க திமுக விற்கு TV Channel இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகி கலைஞர் TV தொடங்க வேண்டியதாகி விட்டது. Jaya TV பற்றி கேட்கவே வேண்டாம். பெயர் ஒன்றே போதும். செல்வி ஜெயலலிதாவின் தினசரி அறிக்கை தான் என்றுமே உலகின் தலைப்பு செய்தி அவர்களுக்கு. தேர்தல் முடிவுகளின் போது கூட அதிமுக வென்றால் மட்டுமே Jaya TV இல் முடிவுகளை அறிவிப்பார்கள். இல்லையென்றால் தேர்தல் நடந்த சுவடு கூட இல்லாது போல் ஒரு திரை படத்தை ஒளிபரப்பிகொண்டு வேறு வேலை பார்க்க கிளம்பி விடுவார்கள்.

தேசிய கட்சியான காங்கிரஸ் பிரமுகர்கள் (இதற்கு ஏது தமிழகத்தில் தலைமை) கூட TV Channel கள் ஆரம்பித்துள்ளார்கள். Mega TV, Vasanth TV நல்லவேளை கை TV, சோனியா டிவி எல்லாம் இல்லை. பாமக, மக்கள் TV என்று Channel ஆரம்பித்து பாமக செய்திகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.

உலக அளவில் பொதுவாக TV Channels என்பது Entertainment, News, Lifestyle என்று பலவகை ஆக பிரிவு படுத்தி வைப்பார்கள். தமிழ் TV Channel எந்த விதத்தில் சேர்ப்பது? TV Channel லுக்கு என்று ஒரு புது குறிக்கோளை தமிழ்நாட்டில் மட்டுமே பார்க்கலாம். இந்த லட்சணத்தில் Captain TV என்று விஜயகாந்த் ஒரு Channel லை பொங்கல் அன்று ஆரம்பிக்க இருக்கிறார்.

No comments:

Post a Comment