Sunday, 16 August 2009

சுதந்திரமில்லா சுதந்திர தின கொண்டாட்டம்.


இன்று நாம் இந்தியாவின் 63 வது சுதந்திர ஆண்டின் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த சுதந்திரத்துக்கு பின்னால் எத்தனை உயிர்கள், எத்தனை இழப்புகள் மற்றும் எத்தனை போராட்டங்கள் என்று நமக்குத் தெரியும். இன்று இங்கிலாந்தில் சில இடங்களில் இந்திய தேசிய மூவர்ண கொடி பறப்பதை கண்டு கண்களின் ஓரத்தில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. உள்ளம் சிலிர்க்கின்றது. இதனிடையே இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்கிறது? சுதந்திர தினம் நெருங்கும் ஒரு வாரத்திற்கு முன்பே ராணுவமும், போலீசாரும் உஷார் படுத்தப்பட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த படுகிறது.
Bus stand, Railway stations ஆகியவற்றில் மக்கள் சோதனை இடபடுகிறார்கள். நகருக்குள் நுழையும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப் படுகிறது. இவ்வளவு ஏன்? அருகில் உள்ள படங்களை பாருங்கள். 1947 சுதந்திரம் அடைந்த கொண்டாட்டத்துக்கும், 2009 ல் சுதந்திர தின கொண்டாட்டத்துக்கும் உள்ள வித்தியாசத்தை. பிரதமர் கூட சுதந்திர தினம் கொண்டாட கூண்டுக்குள் அடைபட வேண்டியுள்ளது. இதுவா நாம் கேட்ட சுதந்திரம்?

No comments:

Post a Comment