Sunday, 22 March 2009

IPL போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவு


IPL போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசும், சில மாநில அரசுகளும் பாதுகாப்பு காரணங்களை காட்டி மறுத்ததால், IPL போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் IPL கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்சனை ஏற்படும் என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

IPL போட்டிகள் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கிரிக்கெட் மோகத்தை பயன்படுத்தி பணம் பண்ணுவதற்காக சில பணக்கார முதலாளி வர்க்கத்தால் உருவாக்கப்பட்டது. போட்டிகள் நடக்காமல் போனால் அவர்களுக்கு பல கோடி ரூபாய்கள் வருமான இழப்பு ஏற்படும். அதனால் அண்ணன் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன... எனக்கு திண்ணை காலியாக வேணும் என்னும் கதையாக, வெளிநாட்டில் நடத்தியாவது டிவி ஒளிபரப்பு மூலம் பணத்தை அள்ளிவிட தீர்மானித்திருக்கிறார்கள். அருகில் உள்ள படத்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்தியாவின் ஏழை மக்கள். IPL நடக்காவிட்டால் இவர்கள் அடுத்த வேளை உணவிற்கே திண்டாடுபவர்கள்.

No comments:

Post a Comment