Monday, 22 December 2008
அஇசமக வின் துணை தலைவர்...
அஇசமக வின் துணை தலைவராக திருமதி ராதிகா சரத்குமார் பதவி ஏற்றுகொண்டார். நெல்லையில் தலைவர் சரத்குமார் இதை அறிவித்தார். மேலும் திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தும் தெரிவித்தார் திரு சரத்குமார். அஇசமக என்றால் ஏதோ ராடன் நிறுவனம் போல் ஒரு corporate கம்பெனி என்று நினைத்து விடாதிர்கள். ஏனென்றால் பொதுவாக கணவர் ஆரம்பித்த ஒரு நிறுவனத்தில் மனைவியும் ஒரு தலைமை பொறுப்பை ஏற்றுகொள்வது ஒரு வழக்கம் தான். அதுமாதிரி இல்லை இது. இதில் ஒரு சிறு வித்தியாசம்உள்ளது. இதற்கென்று கொடி எல்லாம் வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். அப்படியானால் இது ஒரு அரசியல் கட்சியாகத் தான் இருக்கும். ஆனால் இதை அறிவிக்க சரத்குமார் குடும்பத்தோடு திருநெல்வேலி வரை வருவானேன்? சென்னையில் வீட்டிலே அறிவித்து இருக்கலாம். கணவரும் மனைவியும் ஒரே வீட்டில் தானே இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment