Friday 5 June 2009

கப்பலேறி போயாச்சு...

Times of India நாளிதழ் நடத்திய sting ஆபரேஷன் மூலம் MBBS சீட்டுகளின் விற்பனை, மற்றும் சீட்டுகளின் விலை விபரம் தெரிய வந்துள்ளது. அதுவும் நம் தமிழ்நாட்டில் உள்ள கல்வி தந்தைகளின் கல்லூரிகளையே சாட்சியாக காட்டியுள்ளனர். மிக பெருமையாக இருக்கிறது. அதில் ஒரு கல்வி தந்தையான ஜெகத் ரட்சகன் சற்று நாட்களுக்கு முன்னர் தான் மத்திய அமைச்சராகி இருக்கிறார் தமிழ் இன தலைவர்? திரு கருணாநிதி அவர்களின் தயவில். ஒவ்வொரு தமிழனும் நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொள்ளலாம். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்ற கதையாக, தனக்கும் அந்த கல்லூரிக்கும் சம்பந்தம் இல்லை என்று மறுப்பு வேறு. அதற்கு ஆதாரமாக இருந்த கல்லூரியின் website டை நிறுத்தி விட்டார். பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைத்ததாம். Medical Council of India வின் website டில் இன்னும் அவர் பெயர் இருக்கிறதே? http://www.mciindia.org/apps/search/view_college.asp?ID=279. இதை கூட அவர் அமைச்சர் என்ற செல்வாக்கை பயன் படுத்தி எடுத்து விடலாம். இன்னும் ஏன் விட்டு வைத்துள்ளார் என்று தெரியவில்லை. . தென் கொரிய நாட்டில் முன்னால் அதிபர் தன் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிவிட்டார்கள் என்று தற்கொலை செய்து கொண்டார். அதை மறுக்க கூட முடியாத கோழை போல அந்த தலைவர். ஒரே ஒரு முறை இந்திய அரசியல் வாதிகளிடம் ஒருநாள் workshop அட்டென்ட் பண்ணி அரசியல் கற்றிருக்கலாம். Google image search இல் 'Jegath Ratchagan' என்று டைப் செய்து தேடி பாருங்கள். பக்கத்தில் உள்ள ரஜினியின் இமேஜ் display ஆகிறது.

No comments:

Post a Comment