Tuesday, 9 June 2009
தோல்வியிலும் அதிக வாக்குகள் பெற்று புதிய சாதனை
ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட தமிழரான ஜனனி ஜனநாயகம் தோல்வி அடைந்தார். இந்திய அரசியல்வாதிகள் பாணியில் சொன்னால் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாகப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.
லண்டன் பகுதியிலிருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டிருந்தார் ஜனனி. அவருக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் பேராதரவு தெரிவித்திருந்தனர். ஜனனி வெற்றி பெற்றால் இலங்கைத் தமிழர்களின் அவலம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அவர் மூலமாக ஒலிக்கும், விடிவு காலம் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நாங்கள் அனைவரும் அவர் வெற்றி பெறுவார் என்றே நம்பினோம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஜனனி தோல்வியுற்றார். இருப்பினும் கூட, 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்து விட்டார் ஜனனி.
ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, எந்த ஒரு சுயேச்சை வேட்பாளரும் இவ்வளவு ஓட்டுக்கள் இதுவரை பெற்றதில்லை. அந்த வகையில் ஜனனி வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த சில கட்சிகளின் வேட்பாளர்களை விட ஜனனி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார். ஜனனி ஒரு லட்சம் வாக்குகளை பெற்றிருந்தால் MP ஆகி இருப்பார்.
லண்டன் பகுதியில் எட்டு எம்.பி இடங்கள் உள்ளன. இதில், 3 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சியும், ஆளும் தொழிலாளர் கட்சி 2 இடங்களையும் பெற்றன. லிபரல் டெமாக்ரட்ஸ், கிரீன் கட்சி, இங்கிலாந்து சுயேச்சைக் கட்சி ஆகியோருக்கு தலா ஒரு இடம் கிடைத்தது.
Jan பற்றிய சிறு தொகுப்பு கீழே உள்ளது....
Subscribe to:
Post Comments (Atom)
இவர்களை எமக்கு அறிமுகப்படுத்தியமைக்கு எமது நன்றிகள் ..
ReplyDeleteஅன்பு ஷாலினி
ReplyDeleteதங்கள் தமிழ் ஆர்வம் மற்றும் துடிப்பு பாராட்ட தக்கது.
உங்கள் இடுகைகளின் தரம் அற்புதம், எழுதும் நடை அழகு.
வாழ்க நீர். வளர்க உமது அறிவும் ஆற்றலும் தமிழ் தொன்றும்.
தமிழின் பால் எனக்குள்ள காதலின் மீதம் தங்கள் எழுத்தின் மீதும் இடுகையின் மீதும் வீழ்ந்தது.
நன்றி
அன்பு சகா
ஹரிஷ்
www.parundhu.blogspot.com