Monday, 22 December 2008
அஇசமக வின் துணை தலைவர்...
அஇசமக வின் துணை தலைவராக திருமதி ராதிகா சரத்குமார் பதவி ஏற்றுகொண்டார். நெல்லையில் தலைவர் சரத்குமார் இதை அறிவித்தார். மேலும் திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தும் தெரிவித்தார் திரு சரத்குமார். அஇசமக என்றால் ஏதோ ராடன் நிறுவனம் போல் ஒரு corporate கம்பெனி என்று நினைத்து விடாதிர்கள். ஏனென்றால் பொதுவாக கணவர் ஆரம்பித்த ஒரு நிறுவனத்தில் மனைவியும் ஒரு தலைமை பொறுப்பை ஏற்றுகொள்வது ஒரு வழக்கம் தான். அதுமாதிரி இல்லை இது. இதில் ஒரு சிறு வித்தியாசம்உள்ளது. இதற்கென்று கொடி எல்லாம் வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். அப்படியானால் இது ஒரு அரசியல் கட்சியாகத் தான் இருக்கும். ஆனால் இதை அறிவிக்க சரத்குமார் குடும்பத்தோடு திருநெல்வேலி வரை வருவானேன்? சென்னையில் வீட்டிலே அறிவித்து இருக்கலாம். கணவரும் மனைவியும் ஒரே வீட்டில் தானே இருக்கிறார்கள்.
Wednesday, 17 December 2008
உருப்படியான காரியம்...
மத்திய அரசு நேற்று (16 -Dec -08) உருப்படியாக இரண்டு காரியங்களை செய்துள்ளது. NIA என்னும் National Investigation Agency என்னும் புலனாய்வு நிறுவனம் அமைக்கும் மசோதாவையும், Unlawful Activities (Prevention) என்னும் சட்ட திருத்த மசோதாவையும் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் தீவிரவாதத்துக்கு துணை போவோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும். இனியாவது தீவிரவாதம் கட்டுபடுத்தப் படுகிறதா என்று பார்க்கவேண்டும். ஆனால் இந்த சட்டம் தவறாகவும், அரசியல் எதிரிகளை பழிவாங்கவும் உபயோகிக்காமல் நேர்மையாக செயல் படுத்த பட வேண்டும். இது மத்திய, மாநில ஆட்சியாளர்களின் கையில் தான் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Saturday, 6 December 2008
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு...
மத்திய அரசு ஒரு வழியாக மக்கள் மீது பரிதாபம் காட்டியுள்ளது. (காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது) பெட்ரோல் விலையில் ஐந்து ரூபாயும், டீசல் விலையில் இரண்டு ரூபாயும் குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தற்போது முறையே சராசரியாக ஐம்பது மற்றும் முப்பத்தி இரண்டு ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்புக்கு கீழே கண்டவைகள் கூட காரணங்களாக இருக்கலாம்...
1) கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 44 டாலருக்கும் குறைவாக இறங்கியும் மத்திய அரசு பெட்ரோல் விலை பற்றி கவலைபடாமல் இருந்ததால் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி.
2) மும்பை தாக்குதலில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பலாம்.
3) விலைவாசி உயர்வை பற்றி பிரச்சாரம் மேற்கொள்ளும் எதிர் கட்சிகளின் வாயை அடைக்கலாம்.
4) எல்லாவற்றிகும் மேலாக மக்களவை தேர்தல் மிக அருகில் நெருங்கியதும் கூட காரணமாக இருக்கலாம்.
எப்படி இருந்தாலும் சரி... பெட்ரோல், டீசல் விலையை குறித்த மத்திய அரசுக்கு ஒரு சபாஷ்... மற்றும் நன்றி...

Labels:
National
Friday, 5 December 2008
மும்பையில் இது தான் நடந்ததாம்...
ஒரு பாகிஸ்தான் சேனலில் இரண்டு அறிவாளிகள் அமர்ந்து அலசி ஆராய்ந்து மும்பையில் உண்மையில் என்ன நடந்தது என்று சொல்லி இருக்கிறார்கள்.
http://www.youtube.com/watch?v=I7np3nWK8_c
பாகிஸ்தானில் Experts சே இந்த அறிவோடு இருந்தால் அங்கே இருக்கும் பாமர மக்களின் அறிவு நிலை என்னவாக இருக்கும்?
உண்மையில் சூரியன் மிக குளுமையானது. அது பகலில் தெரிவதால் தான் வெப்பமானது போல் தெரிகிறது என்ற உண்மையை கண்டுபிடித்து சொல்லிஇருக்கிறார்கள்.

Subscribe to:
Posts (Atom)