Saturday, 6 December 2008

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு...

மத்திய அரசு ஒரு வழியாக மக்கள் மீது பரிதாபம் காட்டியுள்ளது. (காட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது) பெட்ரோல் விலையில் ஐந்து ரூபாயும், டீசல் விலையில் இரண்டு ரூபாயும் குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தற்போது முறையே சராசரியாக ஐம்பது மற்றும் முப்பத்தி இரண்டு ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்புக்கு கீழே கண்டவைகள் கூட காரணங்களாக இருக்கலாம்...

1) கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 44 டாலருக்கும் குறைவாக இறங்கியும் மத்திய அரசு பெட்ரோல் விலை பற்றி கவலைபடாமல் இருந்ததால் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி.
2) மும்பை தாக்குதலில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பலாம்.
3) விலைவாசி உயர்வை பற்றி பிரச்சாரம் மேற்கொள்ளும் எதிர் கட்சிகளின் வாயை அடைக்கலாம்.
4) எல்லாவற்றிகும் மேலாக மக்களவை தேர்தல் மிக அருகில் நெருங்கியதும் கூட காரணமாக இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் சரி... பெட்ரோல், டீசல் விலையை குறித்த மத்திய அரசுக்கு ஒரு சபாஷ்... மற்றும் நன்றி...

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பாகிஸ்தானுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்த பின்னர் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் political unity and considering various options to contain pakistan பற்றி அடுத்து எழுதுவீர்கள் என எதிர்பார்கிறேன் !

    ReplyDelete
  3. ஆனாலும் பாகிஸ்தான் மீது போர் புரியும் நிலைமையில் நாம் இல்லை என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும் KK. போரை ஆரம்பிப்பது எளிது. ஆனால் முடிப்பது மிகவும் கடினம்.

    ReplyDelete