Thursday, 28 May 2009

9 கலெக்டர்கள்-ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 9 கலெக்டர்கள் உள்பட பல பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக்கழக நிர்வாக இயக்குநராக உள்ள தாயனந்த் கட்டாரியா இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

இதுவரை தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த அதுல்ய மிஸ்ரா, போக்குவரத்து கழகச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்து செயலாளராக உள்ள தேவேந்திரநாத் சாரங்கி வனத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சத்யபிரத சாஹூ விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் செயலாளராகவும், அந்தப் பொறுப்பில் இருந்து வந்த சுதீப் ஜெயின் ஊரக வளர்ச்சித்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதித்துறை சிறப்பு செயலாளராக தமிழ்நாடு சாலை திட்ட இயக்குநர் தியாகராஜன் மாற்றப்படுகிறார்.

பொதுத்துறை இணைச் செயலாளர் எம்.சந்திரசேகரன், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார்.

அங்கு ஆட்சியராக இருந்த உதயசந்திரன் மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கஜ் குமார் பன்சல் மாற்றப்பட்டு வேளாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராக உமாநாத்தும், இதுவரை அந்த பொறுப்பில் இருந்து வந்த பழனிகுமார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த.ஜெயராமன் திருநெல்வேலி ஆட்சியராகவும், சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த மைதிலி ராஜேந்திரன் தொழில்துறை துணைச் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை துணைச் செயலாளராக இருந்து வந்த ஷோபனா சென்னை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் கடலூர் ஆட்சியராகவும் மதுரை ஆட்சியராக மதிவாணனும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment