போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி விபத்தில் சிக்கியவர்களுக்கு விரைவாக முதலுதவி வழங்கும் வகையில் அவசர பைக் ஆம்புலன்ஸ் சேவை முதன் முறையாக கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கே.ஜி. மருத்துவமனை சார்பில் இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நடந்த துவக்க விழாவில் அதன் தலைவர் ஜி.பக்தவத்சலம் தலைமையில் கோவை மாநகரக் காவல்துறை ஆணையர் கே.சி.மஹாலி சேவையை துவக்கி வைத்தார்.
பக்தவத்சலம் கூறுகையில்,
சைரன் விளக்குடன்கூடிய இந்த பைக் ஆம்புலன்ஸ் நான்கு சக்கர வாகனங்களைப் போல் போக்குவரத்தில் சிக்காமல் விரைவாக செல்ல முடியும்.
மருத்துவப் பயிற்சி பெற்ற ஒருவர் இந்த பைக் ஆம்புலன்சில் சென்று முதலுதவி செய்வார். விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்த இழப்பை நிறுத்தி, செயற்கை பிராண வாயு செலுத்தும் வசதி இந்த பைக்கில் உள்ளது.
இந்த சேவை தேவைப்படுவோர் 155 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்றார்
Thursday, 28 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment