Saturday, 22 November 2008

கலைஞர் அவர்களின் கேள்வி பதில்


கேள்வி: சட்டக் கல்லூரி கலவரம் வன்முறை பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்தினால் போதாது என்றும், பதவியில் இருக்கிற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரிக்கவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்தறிவித்து இருக்கிறார்களே?

கலைஞர்: மேற்கு வங்காள அரசு, நந்திகிராம நிகழ்ச்சியில் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானவர்கள் பதினான்கு பேர் என்று அந்த மாநில சட்டமன்றத்திலேயே அரசின் சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதே; அதற்கும், சுப்ரீம் கோர்ட்டில் பதவியிலிருக்கும் நீதிபதி மூலம் விசாரணை நடத்திட முன் வருமா? அதைப் போலவே சிங்கூர் சிறப்பு பொருளாதார மண்டலப் பிரச்சினையில் 18-12-2006 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தெமாலிக் மற்றும் கதித்தத்தா ஆகியோர் விவசாய நிலத்தைப் பாதுகாப்போம் இயக்கத்தைச் சேர்ந்த தபசி மாலிக் என்ற பெண்ணை கற்பழித்து கொலை செய்த சம்பவம் குறித்து பதவியிலே உள்ள நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைத்திட தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பரிந்துரை செய்ய முன்வருவார்களா? அப்படி நடைபெற்றால் அதைப் பாராட்டிவிட்டு - அதன் பிறகு தமிழகத்திலே அவர்களின் யோசனையைப் பரிசீலிக்கலாம்.

எது எதுக்கோ இந்த கழக அரசு, முன்மாதிரி அரசு அப்படின்னு சொல்லிக்கிறீங்களே ஐயா... இந்த விசயத்துல மட்டும் ஏன் மற்றவர்கள் முன்மாதிரியா இருக்கட்டும்னு பின்னாடி போறீங்க? இதுக்கு ஏன் நீங்களே முன்னுதாரணமா இருக்ககூடாது?

No comments:

Post a Comment