Sunday 30 November 2008

அப்பாடா.....!

Atlast திரு சிவ்ராஜ் பட்டில் ராஜினாமா செய்துள்ளார். நாம் அனைவரும் அவருக்கு நம் நன்றியை தெரிவித்துக்கொள்ள வேண்டும். ஒரு வழியாக அவருக்கு இந்திய மக்களின் மீது பரிதாபம் ஏற்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது. ஆனால் இதில் மேலும் மேலும் சிக்கலையே ஏற்படுத்தி உள்ளனர். உள்துறையை சிவராஜ் பட்டில் அவர்களிடமிருந்து எடுத்து, திரு ப. சிதம்பரம் அவர்களிடம் கொடுத்துள்ளார்கள். இதைவிட ஒரு கொடுமை என்னவென்று சொல்வது? ஏற்கனவே, சிதம்பரம் அவர்கள் finance துறையில் பணியாற்றி முழுமையாக மக்களின் நம்பிக்கையை இழந்தவர். அவரிடம் மீண்டும் ஒரு மிக முக்கியமான மற்றும் தற்போது மிக அவசியமாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய துறையான உள்துறையை கொடுத்திருப்பது சரிதானா? (இவர் share market மிக உச்சத்தில் இருந்தபோது தன் துறை வாரியான நடவடிக்கை தான் காரணம் என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டார். share market கீழே விழுந்த பொது அதற்கு காரணம் உலக பொருளாதார வீழ்ச்சி என்று ஒதுங்கிகொண்டவர், என்னே ஒரு பொறுப்புணர்ச்சி) மேலும் மிகுந்த பொறுப்பில் இருக்கும் பிரதமர் finance துறையை மேலும் தன்னோடு சேர்த்துக் கொண்டார். செய்வன திருந்த செய் என்று ஒரு பழமொழி உண்டு. இவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லயோ?

4 comments:

  1. share market கம்மியா இருக்கும் போது தன்னோட துறைய பிரதமருக்கு transfer பண்ணல ... உலகம் பூரா share market downa இருக்குற நேரத்துல terrorist attack நடந்தாஅவரு என்ன பண்ண பண்ணுவாரு ? நான் UPA வுக்கு support பண்ணல, but its a fact.
    ஆனா ஒரு நல்ல விஷயம் என்னன்னா இப்பவாவது ஷிவ்ராஜ் படேல் resign பண்ணாரே... நீங்க அப்பாவி பொண்ணு, opinion differsனு already disclaimers குடுத்துடீங்க !

    ReplyDelete
  2. No KK... நான் எந்த இடத்திலேயும் share market down ஆனதுனாலே finance துறையை கொடுத்துட்டார்னு சொல்லவே இல்லை. மீண்டும் ஒரு முறை blog படிக்கவும். ஏற்கனவே மக்கள் நம்பிக்கையை இழந்தவரிடம் மீண்டும் ஒரு முக்கியமான துறையை அதுவும் முக்கியமான நேரத்தில் கொடுத்தைபற்றி தான் ஆதங்கப்பட்டுள்ளேன். உங்களை போன்று சிலர் அவர் மீது இன்னும் நம்பிக்கை கொண்டிருப்பது அவரின் பலம் என்றே கருதுகிறேன்.

    ReplyDelete
  3. சிறு திருத்தம்.. எனக்கு காங்கிரஸ் மீதோ சிதம்பரம் மீதோ நம்பிக்கை இருந்ததில்லை.. ஆனால் home ministryai டேக் ஓவர் பண்ண அவரை விட இப்போ அந்த govt.ல் competenta யாரும் இல்ல. vote pannathuku innum konja naal anubavichu than aaganum

    ReplyDelete
  4. I agree with this point...

    ReplyDelete