Sunday, 23 November 2008

விடுதலை புலிகளிடம் பணம் பெற்றார் பிரபல நடிகர் - சுப்ரமணியன் சுவாமி.


விடுதலை புலிகளிடம் பணம் பெற்ற பிரபல நடிகரின் பெயரை தக்க ஆதாரத்துடன் விரைவில் வெளியிடுவேன் என்று Dr.சுப்ரமணியன் சுவாமி வழக்கம் போல் தெரிவித்துள்ளார். இவருக்கு மதுரை மக்கள் வாய்ப்பு கொடுத்த போதே, மக்களின் பிரச்சனையை பற்றி கவனிக்காமல் மத்திய அரசை கலைப்பதிலும், கூட்டணியை உடைப்பதிலும் மும்முரமாக இருந்தார். மதுரையை singapore ஆக மாற்றுவேன் என்றல்லாம் உதார் விட்டுக்கொண்டு காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தார். இன்று என்னிடம் ஆதாரங்கள் CD யில் இருக்கிறது, DVD யில் இருக்கிறது என்று அறிக்கை விட்டு அரசியலில் நானும் இருக்கிறேன் என்று அவ்வப்போது தெரிவித்துகொள்கிறார். ஆதாரங்கள் இருந்தால் மக்களிடம்மும், மீடியாவிடமும் வெளியிட வேண்டியது தானே? இதுக்கு என்ன தக்க நேரம் வேண்டியது கெடக்கு? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...?

No comments:

Post a Comment