Sunday, 23 November 2008

கலைஞரின் குடும்ப அரசியல் பற்றி விமர்சிக்க விஜயகாந்த்துக்கு தகுதி இருக்கிறதா?


திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக மக்களுக்கு உண்மையாக சேவை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் தேமுதிக என்று திரு. விஜயகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை முழங்கி கொண்டு வருகிறார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகவும் வரவேற்க கூடியது. ஆனால் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் பல்வேறு எண்ணங்கள் மக்களுக்கு உதிக்கிறது. தேமுதிக கட்சி ஆரம்பித்தவுடன் நமக்கு ஒரு அண்ணியாரும், ஒரு தளபதியும் கிடைத்திருக்கிறார்கள் என்பதை தவிர வேறு ஒன்றும் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி இல்லை. கலைஞர் தன் குடும்ப சொத்தாக திமுகவை மாற்றி கொண்டார். அவரும் அவர் குடும்பத்தாரும் வேண்டுமானால் இதை மறுத்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் உண்மையை நாம் அனைவரும் அறிவோம். தமிழகத்தை இரண்டு பகுதிகளாக ஒவ்வொரு மகனுக்கும் பிரித்து கொடுத்து விட்டார். மேலும் அடுத்த தலைவர் யார் என்பதிலும் சண்டை வழுத்துக்கொண்டே போகிறது. திமுகவில் இதுதான் தற்போதைய நிலை. தேமுதிகவில் கேப்டன் எங்கு சென்றாலும் அண்ணியாரின் கட் அவுட் மற்றும் போஸ்டர் எங்கெங்கு காணினும் வியாபித்துள்ளது.
மேலும் அண்ணியாரின் தம்பி, கேப்டனின் மச்சினனும் ஆனா சுதீஷ் போஸ்டர் களும் எங்கும் வியாபித்துள்ளது. ஏதோ இவர்களை விட்டால் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேறு நாதி இல்லாதது போல் நினைக்கிறார்கள். இந்த அம்மணி இந்த நாட்டுக்காக என்ன செய்து விட்டார்? ஒரு நடிகரின் மனைவி என்பதை தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது. நடிப்பு என்பது ஒரு தொழில். மற்ற தொழில்களில் கிடைக்கும் popularity யை விட இதில் கிடைக்கும் popularity அதிகம். அதை தவறாக எடுத்துக்கொண்டும், அதையே ஒரு தகுதியாகவும் நினைத்துக்கொண்டும் பதவிக்கு தன் குடும்பம் மொத்தத்தையும் இழுத்துக்கொண்டு வருவது இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. தற்போது கலைஞர் செய்து கொண்டிருப்பதையே வேறு நபர்களை வைத்து செய்வதற்கு இன்னொருவர் எதற்கு? Known devil is better than unknown devil.இதற்கு தற்போது இருக்கும் திமுகவே போதுமே? எதற்கு புதியதாக ஒரு தேமுதிக?. ஆக தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி இதுதான் போலிருக்கு. இப்படி ஒவ்வொரு தலைவரது குடும்பத்தையும் வாழ வைத்துக்கொண்டு தான் இன்னும் எங்கே இருக்கிறோம், தன்னிலை என்ன என்பதையே உணராமல் கைதட்டிக்கொண்டு இருக்கும் வரை இதுபோன்ற தலைவர்கள் தோன்றிக்கொண்டே தான் இருப்பார்கள். திரு விஜயகாந்த் அவர்கள் கலைஞரை பற்றி குறை கூறும் முன் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கலைஞரை குறை கூறும் தார் மிக உரிமையை விஜயகாந்த் இழந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

Photo நன்றி : தினமலர்

3 comments:

  1. ஷாலினி! தமிழக அரசியலில் என்ன நடக்கிறது என்று வெளிநாட்டில் இருக்கும் நமக்கு அவ்வளவாக தெரியாமல் இல்லை, இணையத்தின் வழி நாம் அனைவரும் நன்று தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதூ உண்மைதான்! அந்த வகையில் விஜயகாந்த் பற்றி எனக்கு மனதில் படுவதெல்லாம் ஒன்றுதான்!!
    அமெரிக்க அரசியல் போலவே தமிழக மக்களும் ""மாற்றம்" தேவையென நினைக்கிறார்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்வோம் என்று விஜயகாந்த நினைக்கிறார்!! ஒபாமா என்ன செய்யப்போகிறார் என்று தெரிந்துகொண்டு மக்கள் விஜயகாந்துக்கு ஓட்டுபோடட்ட்டும், என்னை பொறுத்தவரை என்னை தமிழக முதல்வராகினாலும், நான் ரமணாவில் வருவது போல எல்லாம் மக்களுக்கு நல்லது செய்யமுடியுமா என்பது சந்தேகம். இதெல்லாம் அரசியலில் சகஜம் என்று போய்கிட்டே இருக்கவேண்டியதுதான் ஷாலினி!

    ReplyDelete
  2. உங்கள் கருத்தை தான் நானும் கொண்டிருந்தேன். திரு விஜயகாந்த் மாற்றம் கொண்டு வருவார் என்று. ஆனால் அங்கே நடப்பதை பார்த்த பின் எங்கே காட்சிகள் மாறாமல் ஆட்கள் மட்டும் மாறிவிடுவார்களோ என்று தான் ஆதங்கப்படுகிறேன்.

    ReplyDelete
  3. அன்பு ஷாலினி,
    தங்களின் ஆதங்கம் நியாயமானது.
    இங்கு யார் வந்தாலும் நிலை மாற போவதில்லை.
    கொள்ளை காரர் கூட்டம் மாறுமே தவிர,
    கஜானா துடைக்கப்படுவது தவிர்கமுடியாதது.
    சமீபத்தில் இங்கு கோயம்பத்தூரில் தி.மூ.க மற்றும் ஆ.தி.மூ.க வின் மாநாடுகள் நடைபெற்றன.
    மாநாடுகளில் கரியான ஒவ்வொரு நாணயமும் என் நெஞ்சை உலுக்கியது.
    ஒவ்வொரு மின்விலக்கிற்கும் ரூ.30 செலவு. இப்படி ஆயிரம் விளக்குகள் எரிந்தன வீதியெங்கும்.
    மக்களுக்கு வாழ வழி வகுப்பேன் என்று தலைவர்கள் சொல்வதில்லை.
    மாறாக ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச தொலைக்காட்சி பெட்டி என்று மக்களை மயக்கி,
    தங்கள் அரசியல் வர்த்தகத்திற்கு எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள்.
    எனது " வாழ்க ஜன- நாயகம்" கவிதையை படிக்கவும்.
    எனது ஆதங்கமும் உங்களுக்கு புரியும்.

    புரட்சி மலர வேண்டும்.

    அன்பு சகா
    ஹரிஷ்e

    ReplyDelete