Thursday, 27 November 2008
மீண்டும் தீவிரவாதிகள் அட்டகாசம்...
மும்பை நகரில் நேற்று (26-Nov-08) இரவு தீவிரவாதிகள் தொடர் துப்பாக்கி சூடு நடத்தியதில் எண்பது பேர் கொல்லப்பட்டனர் மேலும் 200 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மும்பையின் luxury ஹோட்டல்கள் ஆன oberai, taj போன்ற இடங்களில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் மேலை நாட்டவரை குறிவைத்து நடத்தியதாக தெரிகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு டெக்கான் முஜாகிதின் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
மீண்டும் திரு சிவராஜ் பட்டில் அவர்கள் மைக் குவியலின் நடுவே நின்று பேட்டி என்ற பெயரிலே ஒரு சொற்பொழிவாற்ற போகிறார். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை ஒரு போதும் மத்திய காங்கிரஸ் அரசு ஏற்று கொள்ளாது. உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். விரைவில் இதற்கு காரணமானவர்களை கைது செய்வோம். ஆனால் POTA போன்ற கொடிய சட்டங்களை கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
அட போங்கயா நீங்களும் உங்க அரசியலும்.....
Photo நன்றி : yahoo
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment