பாமகவுடன் தகராறு ஏதும் இல்லை. விலகியதாக சொல்வதெல்லாம் தவறு. அப்படி கூறுவது அவமரியாதையான வார்த்தைகள். யாரையும் வெளியே போ என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் நாகரிகமற்றவர்களும் இல்லை. நாங்கள் எங்கள் வருத்தத்தை சொன்னோம், அவர்கள், தங்களது நிலைமையை விளக்கினர் என்று கலைஞர் அறிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அப்பாவி மக்களாகிய நம்மை எந்த அளவுக்கு மதிப்பிட்டு வைத்துள்ளனர் இந்த தமிழக அரசியல்வாதிகள்.
ஒரு sample க்கு கீழே உள்ள பகுதியை படியுங்கள்.
17-Jun-08 அன்று நடந்த திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தின் முடிவில் கலைஞரின் பேச்சு... (கலைஞரையும், ஆர்காட்டாரையும் பற்றி காடுவெட்டி குரு பேசிய பேச்சின் CD பற்றிய விவாதத்திற்கு பிறகு)
இழிவாக, தரக்குறைவாக, தன்மான உறவைப் பறிக்கும் வகையில் கேவப்படுத்தப்பட்டாலும், அத்தகைய ஒருகட்சி தலைமை அப்படி இழிவுபடுத்தியவர்களை, பேசியவர்களை தட்டிக்கேட்காமலும், அவர் மீது அந்தக் கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் பேசியது தவறு, இத்தகைய கேவலமான வார்த்தைகளை பேசியிருக்கக் கூடாது என்று மன்னிப்போ, வருத்தமோ கேட்காத நிலையிலும் கூட, அப்படி கேவலப்படுத்திகிறவர்களோடு, உறவை நீடிப்பதுதான் கூட்டணியின் இலக்கணம் என்பதை ஏற்க இயலாத காரணத்தால், அவர்களை இணைத்துக் கொண்டு இந்தக் கூட்டணியை இனியும் தொடர முடியாது என்ற நிலையை இந்த உயர் நிலை செயல் திட்டக் குழு வருத்தத்தோடு அறிவிக்கிறது
( இவை கூட்டணி முறிவு இல்லையா... இது பாமகவுடனான கூட்டணி பற்றி புகழ்ந்து பேசியதா?)
அன்று பாமக கூட்டணியை விட்டு போனால் என்ன? காங்கிரஸ் இருக்கிறது, கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்கள் போன்ற நிலை இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. கம்யூனிஸ்ட்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் பார்லிமென்ட் தேர்தல் வேறு நெருங்குகிறது. அதன் பின் காங்கிரசுக்கு திமுகவின் தயவு தேவை படுமோ படாதோ... ஆனால் மாநிலத்தில் அவர்களின் தயவால் தான் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது... இதையெல்லாம் எதிர் பார்த்திருந்தால் அன்று திமுகவின் உயர் நிலை குழு கூட்டமே கூடி இருக்காதே...
அன்று காடுவெட்டி குரு பேசிய பேச்சுகள் அனைத்தும் இன்று புகழ்ச்சியாக மாறிவிட்டதா? இந்த அரசியல்வாதிகள் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று சினிமாவில் பார்த்து இருக்கிறோம். இன்று அதை நேரிலும் பார்க்கிறோம். சினிமாகாரர்களை குறை கூறும்போதெல்லாம் அவர்கள் சொல்வார்கள், நிஜத்தில் நடப்பதைத் தானே படமாக எடுக்கிறோம் என்று. உண்மைதானுங்கோ... ஒத்துக்குறோம்...
Wednesday, 26 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம் ஷாலினி, தங்களுடைய வரைப்பூவுக்குள் பாடகி ஷாலினி வரைப்பூ வழியாக வந்தேன்! நிறைய எழூதியிருக்கிறீர்கள், எல்லாமே அரசியல் என்பதால் பொறுமையாக படிக்கவேண்டும், அலுவல்களுக்கு இடையே படிப்பதால் நேரம் போதவில்லை,, ஓய்வாக இரூக்கும்போது நன்றாக படித்துவிட்டு என் கருத்துக்களையும் பதிக்கிறேன்,நன்றி! ஆமாம் எப்படியிருக்கு இங்கிலாந்து!! Have a great day! All d best! c u again! bye
ReplyDeleteThank you very much. England அமைதியாக இருக்கு சார். நம் இந்தியா மண்ணில் தான் பாதுகாப்பாக இருப்போம் நினைச்சேன். நடப்பவற்றை பார்த்தால் இந்தியா யுத்த பூமியாக மாறி கொண்டிருக்கிறதோ என்று பயமாக இருக்கிறது.
ReplyDelete