Friday 28 November 2008

இந்தியத்தாய் காயப்பட்டு குற்றுயிராய் இருக்கிறாள்...

கீழே உள்ள கடிதத்தை படியுங்கள். சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்னர் Macaulay என்பவர் இந்தியாவைப் பற்றி எழுதியவை.


ஆனால் இன்று...?

இன்று நம் இந்திய தாய் இருக்கும் நிலைமையை கண்டு கண்ணீர் விடாத இந்திய இதயம் இருக்க முடியாது. இந்தியாவில் தீவிரவாதத்தை யார் வேண்டுமானாலும் நிகழ்த்திவிட்டு எந்த கவலையுமின்றி சுகமாக வாழலாம் என்ற நிலை தான் உள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக மிக மென்மையாகவும், நளினமாகவும் சட்டங்களை வைத்துக்கொண்டிருக்கும் ஒரே தேசம் இந்தியாவாத்தான் இருக்க முடியும். இதை மறுத்தால் கண்டிப்பாக சொல்லிவிடலாம் நீங்கள் ஒரு ஆளும் கட்சியின் அரசியல்வாதி அல்லது அனுதாபி என்று. அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் முகமூடியை கழற்றி வைத்துவிட்டு உங்கள் மனசாட்சியை மட்டும் முன்னிறுத்தி யோசித்து பாருங்கள். இந்தியத் தாய் எவ்வளவு காயமுற்ற நிலையில் இருக்கிறாள் என்று புரியும். இன்னும் எத்தனை இந்திய சகோதர்கள் இறந்தால்... இந்தியாவில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று உங்களுக்கு நீங்களே புகழாரம் சூட்டிகொள்வதையும், உண்மையை மறைப்பதையும் நிறுத்தி... நிதர்சனத்தை ஏற்று கொள்வீர்கள்? மும்பையின் நிகழ்வுக்கு பிறகாவது ஒத்துக் கொள்வீர்களா இந்திய அரசின் தோல்வியை? நமது பிரதமர், உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் உள்ளிட்டு யாருக்கேனும் இப்பவாவது மனம் இருக்கிறதா அரசின் இயலாமையை ஒத்துக் கொள்ள? தீவரவாதத்தை ஒழிப்பார்களாம்... ஆனால் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை இல்லையாம்... இப்போது இருக்கும் சட்டங்களே போதுமாம்... அதை வைத்து தீவரவாதத்தை ஒழித்து விட்டீர்களா? அப்படியானால் மும்பை ரயில் நிலையத்திலும், ஹோட்டல் களிலும் நடந்தது என்ன Hide and Seek விளையாட்டா?













நீங்கள் எங்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு தருவீர்கள் என்று தானே அய்யா உங்களை தலைவர்களாக தேர்ந்தெடுத்தோம். இப்படி சப்பை கட்டு கட்டுவதற்கா?




இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு உங்கள் வோட்டு வங்கியை திட்டமிடுவீர்கள்?


மும்பையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து காக்க எத்தனை வீரர்கள் தங்கள் இன்னுயிரை தந்து தியாகம் செய்துள்ளனர். பாவம் அவர்கள் அப்பாவிகள். அவர்களுக்கு தெரியவில்லை அவர்களின் தியாகத்திற்கு நீங்கள் தரும் மதிப்பு என்னவென்று. எப்படியும் இந்த சதி செயலுக்கு மூளையாக ஒரு அப்சல் குரு இருப்பான். பல தியாக வீரர்கள் உயிர் தியாகம் செய்து அவனை பிடித்து உங்கள் கையில் தருவார்கள். நீங்கள் அவனுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து உங்கள் பாதுகாப்பில் வைத்து பராமரித்துக்கொள்வீர்கள். கோர்ட்டில் தீர்ப்பளித்து தண்டனை உறுதி செய்தாலும் ஏதும் ஆகப்போவதில்லை. ராஜமரியாதையுடன் சீரும் சிறப்புமாக பார்த்துகொள்வீர்கள். இதை அறியாத இந்த அப்பாவி கமாண்டோ படை வீரர்கள் தீவிரவாதிகளை பிடிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். கமாண்டோ படை வீரர்களே... தயவு செய்து அவர்களை உயிரோடு பிடித்து விடாதிர்கள்... இந்த அரசியல்வாதிகள் அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள். பின் ஒரு நாள் வேறொரு கூட்டம் அப்பாவி மக்களை பினையக்கைதியாக பிடித்துக்கொண்டு இவர்களை விடுவிக்க கேட்பார்கள். இந்த அரசியல் கோமான்கள் மக்களை காப்பதற்காக இவர்களை விடுவிக்கிறோம் என்று வியாக்கியானம் பேசிக்கொண்டு பத்திரமாக அவர்களின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைப்பார்கள். அதனால் தான் உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறோம்... ஒரு தீவிரவாதியை கூட உயிருடன் பிடித்து விடாதிர்கள். அங்கேயே சுட்டுகொன்று விடுங்கள் அந்த இரக்க மற்ற மிருகங்களை. இதுதான் இந்த அபலை இந்திய தாயின் மக்களின் வேண்டுகோள்.

அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது. இனியும் தாமதித்தால் இந்தியத் தாய் மரணத்தை தான் தழுவாள். நம் தாயை காப்பாற்ற சில அவசர அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டும்.


இந்தியாவின் பாதுகாப்புத் துறை அரசியல்வாதிகளான அமைச்சர்களின் கையில் இருக்க கூடாது. உள்நாட்டு மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கையில் இருக்க வேண்டும். ஒரு அதிகாரியின் தலைமையில் புதிய துறையை உருவாக்கவேண்டும். அனைத்து மாநில போலீஸ் துறையும் இதன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும். இதற்கு பொறுப்பேற்கும் அதிகாரி கண்டிப்பாக குறைந்த பட்சம் 15 ஆண்டுகளாவது ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். அரசியல் சாயம் இல்லாதவராக இருக்க வேண்டும். அவர் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இருக்கவும் கூடாது... இருந்திருக்கவும் கூடாது. ( இல்லையெனில் governer பதவிக்கு ஏற்பட்ட கதி தான் இதற்கும் ஏற்படும். கட்சியில் உள்ள அதிருப்தியாளரை திருப்தி படுத்துவதற்கு அவருக்கு governer பதவி தரக்கூடிய அளவுக்கு governer பதவியின் தரம் தாழ்ந்து விட்டது. ) அவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று நிர்ணயிக்கப் படவேண்டும். ஒருவர் ஒரு முறை மட்டுமே இந்த பதவியை வகிக்க முடியும் என்று ஆக்க வேண்டும். பதவி நியமனம் ஜனாதிபதியாலும், முப்படை தளபதிளாலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். இவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவரை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கக் கூடாது.

அரசியல்வாதிகள், அமைச்சர்கள் யாருக்கும் இந்த துறையை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கக் கூடாது. இந்த துறையின் கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் நிறுவப்பட வேண்டும். போலீஸ் மற்றும் எல்லை படை நியமனம் இந்த துறை மூலமே நடை பெற வேண்டும். போலீஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்த இந்த துறைக்கு மட்டுமே அதிகாரம் வழங்க வேண்டும். (இல்லையெனில் வட்டச் செயலாளருக்கெல்லாம் இன்ஸ்பெக்டர் பயப்பட வேண்டியிருக்கிறது).

தீவிரவாதத்துக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்தவருக்கு 60 நாட்களுக்குள் தீர்ப்பளிக்கபடவேண்டும். அன்றோ அல்லது மறுநாளோ தீர்ப்பு நிறைவேற்றபடவேண்டும். தீர்ப்பு தூக்கு தண்டனையா அல்லது விடுதலையா என்று இருக்க வேண்டும். யார் மீதாவது போலி வழக்கு பதிவு செய்ததாக தெரிந்தால், வழக்கு பதிவு செய்த அதிகாரியை இந்த சட்டத்தின் கீழேயே டிஸ்மிஸ் செய்யும் அதிகாரமும் இருக்க வேண்டும். போலி வழக்கு புகார் ஒரு மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.


லஞ்ச ஒழிப்புத்துறை நீக்கப்படவேண்டும். அதற்கு பதிலாக லஞ்ச ஒழிப்பு நீதி மன்றங்களை ஏற்படுத்த வேண்டும். தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை செய்யும் பொறி வைத்து பிடிக்கும் முறைகளை இந்நீதிமன்றங்கள் செய்யவேண்டும். பிடிபடுபவர்களுக்கு நீதி மன்றம் உடனடியாக தீர்ப்புகளை வழங்கி தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இதில் மேல்முறையீடு இருக்க கூடாது. ஏனென்றால் நீதி மன்றம் நேரடியாக தலையீட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் லஞ்ச ஒழிப்புத்துறை ஒருவரை பிடித்து பின் நீதி மன்றத்தில் நிருபிக்க வேண்டிய அவசியமும், கால விரயமும் இல்லை. லஞ்சப் பேர்வழிகளைப் பற்றிய புகார்களை பொதுமக்கள் இந்நீதி மன்றகளிலேயே முறையிடலாம்.
இந்நீதி மன்ற ஊழியர் லஞ்சம் வாங்கியதாக நிரூபிக்கப்பட்டால், தண்டனையை இரட்டிப்பாக்க வேண்டும்.


Photo நன்றி AP

3 comments:

  1. அன்பு ஷாலினி அவர்களே,
    தங்களது எண்ணங்கள் கண்டு வியந்து, பாராட்டு பூ சண்டு தர இங்கு வினைந்துளேன்.
    அரசியல் நடைமுறைகளை ஆராயும் தங்களுக்கு நான் நினைவூற்ற விரும்புவது யாதெனில் - இந்திய மக்கள் அனைவரும் தங்களை போல் விழிப்புணர்வோடு இல்லை.

    நான் பிழைத்தேண்டா சாமியென்று மீண்டும் அடுத்த வீட்டு நபர்களை பற்றியும் கடந்த மற்றும் எதிர் காலம் பற்றியும் பேசியே காலத்தை வீண் செய்யும் குடி மக்கள் தான் இங்கு மிகுதி.
    புரட்சி இங்கு மலர வேண்டும்.
    அதற்கு தங்களது "பெண்மனம்" நிச்சயம் பங்களிக்கும் என்று நம்புகிறேன்.
    பாரதி கண்டு கனவு வீண் போகவில்லை.
    நன்றி கலந்த வணக்கம்
    சகா ஹரிஷ்

    ReplyDelete
  2. நன்றி ஹரிஷ். தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. எனது www.parundhu.blogspot.com சென்று எனது சினத்தின் துளிகளை கண்டு தங்கள் கருத்தை கூறவும்.

    ReplyDelete