Tuesday, 25 November 2008
தெரியுமா உங்களுக்கு...!
1) உலகில் உள்ள அனைத்து கண்டங்களின் பெயர்களும் (ஆங்கிலத்தில்) ஆரம்பிக்கும் எழுத்திலேயே முடியும்.
2) நம் உடலில் வலுவான தசை நாக்கு தான்.
3)ஒரு பெண், ஆணைவிட இரண்டு மடங்கு அதிகம் இமைக்கிறாள்.
4) உலகில் அதிகம் புழக்கத்தில் உள்ள பெயர் Mohamed.
5)ஒரு மனிதனால் தன் மூச்சை தானே தன் கையால் அடைத்துக்கொண்டு சாக முடியாது.
6)உங்கள் முழங்கையை (elbow) உங்கள் நாக்கை வைத்து தொட முடியாது.
7)பன்றியால் வானத்தை அண்ணாந்து பார்க்க முடியாது.
8)111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
9)குதிரை வீரன் சிலையில், குதிரையின் முன் இரு கால்களும் தூக்கிக் கொண்டிருந்தால், அந்த சிலையில் உள்ள வீரன் போர்க்களத்தில் இறந்ததாக கொள்ளலாம். குதிரை ஒரு காலை மட்டும் தூக்கிக் கொண்டிருந்தால் போரின் காயம் காரணமாக இறந்திருப்பான். முன்னிரு கால்களும் தரையில் ஊன்றி இருந்தால் அவன் இயற்கை மரணம் எய்தியவன்.
10) கெட்டுப்போகாத ஒரே உணவுப்பொருள் - தேன்.
11) யானையால் குதிக்க முடியாது.
12)தீப்பெட்டி கண்டுபிடிக்கும் முன்னரே சிகரட் லைட்டெர் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது.
13) இந்த துணுக்குகளை படித்தவர்களில் 99% பேர் தன் நாக்கால் தன் elbow வை தொட முயற்சித்து இருப்பார்கள்.
Labels:
General; Science
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment